Advertisment

மழையால் திமுகவின் கூட்டம் ஒத்திவைப்பு

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தை இந்த தொகுதியில் முதன் முதலாக தொடங்கிய வாணியம்பாடி நகரத்திலேயே நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தலாம் என முடிவு செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

Advertisment

d

வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு ஆகஸ்ட் 18ந்தேதி திமுக தலைவர் ஸ்டாலின் வருகை புரிவதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வாணியம்பாடி நகராட்சி எதிரே 15 ஆயிரம் நபர்கள் அமரும் வகையில் மைதானம் தயார் செய்யப்பட்டது. இதற்காக பெரிய பந்தல் அமைக்கப்பட்டது.

d

Advertisment

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது கடந்த இரண்டு நாட்களாக வேலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்வதாலும், தமிழகமே தவிப்பதாலும் இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை ஒத்திவைத்துவிட்டது திமுக தலைமை. நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெறும் இடம் மழை நீரால் சேரும் சகதியுமாக மாறிவிட்டது என்பது குறிப்பிடதக்கது.

இந்த நன்றி அறிவிப்பு கூட்டம் வரும் ஆகஸ்ட் 25ந்தேதி என முடிவு செய்து அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe