Skip to main content

அதிகமாக கட்டணம் வசூலித்த திரையரங்குகள்! பணத்தை திருப்பி ஒப்படைக்க வைத்த அதிகாரி

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

 

வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து திரையரங் குகளிலும் ஆகஸ்ட் 11 ந்தேதி மாலை ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். இதன்படி, இராணிப்பேட்டை கோட்டத்தில் உள்ள ஆறு திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக தொகை வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.  

 

v

 

ஏசி வசதியுள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூபாய் 120 ம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பகுதிகளில் தியேட்டர்களில் ரூபாய் 100 ம் , ஊராட்சிப் பகுதிகளில் ரூபாய் 75 மட்டுமே டிக்கட் கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

 

அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்த திரையரங்குகளில் கூடுதலாக வசூல் செய்யப்பட்ட தொகையை திரைப்படம் பார்த்த மக்களுக்கு திருப்பித் தர ஏற்பாடு செய்யப்பட்டது. மொத்தமாக அனைத்து திரையரங்குகளிலும் ரூபாய்.34,400/- பொதுமக்களுக்கு திருப்பித் தரப்பட்டது.  

 

வரிகள் தவிர்த்து, அதிகபட்சமாக டிக்கெட் வசூல் செய்த தியேட்டர்களுக்கு  இனிமேல் அரசு நிர்ணயித்த தொகை கூடுதலாக டிக்கட் வசூல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்