வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரேயுள்ள மேம்பாலத்தில் இருந்து ஒரு இளைஞர் கீழை குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். அவர் யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

வேலூரை அடுத்த கணியம்பாடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 32 வயதான மகேஷ்குமார். ராணுவ வீரராகவுள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி, கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்துவருகிறார். இருவருக்கும் கடந்த ஜீலை மாதம் 11 ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

a

திருமணமானது முதல், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை பைக்கில் கணவன் - மனைவி இருவரும் வரும்போதும் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. இதனால், வண்டியை நிறுத்திவிட்டு கலெக்டர் அலுவலக மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் மகேஷ்குமார் தற்கொலை செய்துகொண்டார்.

Advertisment

இதனைப்பார்த்து, அவரது மனைவி கதறியுள்ளார். அவர் மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்துவிட்டு அழுததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணிடம் சத்துவாச்சாரி போலீஸார், விசாரணை நடத்திவருகிறார்கள்.