வேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பாக மே 21 ந்தேதி காலை 10 மணியளவில், திடீரென முன்னாள் கல்லூரி மாணவர்கள் 4 பேர், தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் உட்பட சில மாவட்டங்களில் 100 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய பாஜக, அதிமுக அரசை கண்டித்து, பதாகைகளை கையில் ஏந்தி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hi1.jpg)
போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். ஏராளமான மக்கள் சுற்றி நின்று பார்த்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் நகர போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 4 இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hi_2.jpg)
அந்த 4 இளைஞர்கள் மீது அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)