Skip to main content

வேலூரில் போலி மதுபான தொழிற்சாலை; 2 பேர் கைது

Published on 01/08/2019 | Edited on 01/08/2019

 


வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்குட்பட்ட கந்தநேரி கிராமம் அருகே உள்ளது பட்டரைதாரர் கிராமம். இந்த கிராமத்தில் மதுபானம் தயாரித்து பாட்டில்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள் என்கிற தகவல் மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரனுக்கு கிடைத்ததும் தனது படையுடன் சென்று ரெய்டு செய்தார்.

 

w

 

தணிகைமலை என்பவரது நிலத்தில் எரிசாராயம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததையும், போலி மதுபானம் தயாரிக்க ஏதுவாக அங்கிருந்த கட்டிடத்தில் முக்கிய மதுபானங்களின் லேபில்கள், காலி பாட்டிகள், கேன், போலிசாராயத்தை நிரப்பிய பாட்டில்களுக்கு மூடி பொறுத்தும் உபகரணம் மற்றும், மதுபானம் தயாரித்து விற்பனைக்கு அனுப்பியதை கண்டறிந்தனர்.

 

w

 

இது தொடர்பாக கே.வி.குப்பத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ரஞ்சித்குமார் மற்றும் பட்டரைதாரர் கிராமத்தைச் சேர்ந்த தணிகைமலையை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தவர்கள், இதன் பின்னால் இன்னும் யார், யார் உள்ளார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நீண்ட வருடங்களாக கெமிக்கல் மதுவை உற்பத்தி செய்து பாட்டில்களில் அடைத்து கிராமப்புறங்களில் வைத்து பாண்டிச்சேரி சரக்கு என விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். தற்போது வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுவதால் வாக்குபதிவுக்காக இந்த சரக்குக்காக மொத்தமாக பெரிய ஆர்டர் தரப்பட்டுள்ளது. அதற்காக கூடுதலாக சரக்கு உற்பத்தி செய்து அனுப்பியுள்ளனர். அதனைப்பார்த்து அந்த ஊரை சேர்ந்த சிலர் போலிஸாருக்கு தகவல் தந்ததாக கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்