Advertisment

அத்தி வரதரை தரிசித்துவிட்டு வரும்போது குடும்பமே பலி

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த செட்டித்தாங்கள் பகுதியை சேர்ந்தவர் இளம்பருதி. இவர் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்து வரும் தொழில் செய்து வருகிறார்.

Advertisment

a

ஜீலை 7 ந்தேதி காலை காஞ்சிபுரத்தில் புகழ் பெற்ற 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்தி வரதரை தரிசனம் செய்ய அவரது மனைவி சரஸ்வதி மற்றும் மகன் தனுஷ் ஆகியோருடன் தனது இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் சென்று தரிசனம் செய்துவிட்டு, மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே வரும்போது, காளிமுத்து என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இளம்பரிதி, சரஸ்வதி, தனுஷ் வந்த இருசக்கர வாகனம் காளிமுத்து மீது மோதிய வேகத்தில் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisment

இதில் பலத்த காயமடைந்த நால்வரும் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர் கொண்டு செல்லும் வழியிலேயே இளம்பருதி தனுஷ் ஆகியோர் இறந்துவிட்டனர். மேலும் சரஸ்வதி, காளிமுத்து இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற காவேரிப்பாக்கம் போலீசார் பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe