சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை மார்கமா செல்லும் ரயில்களில் ஏறுவான் வேலூர் மாவட்டம் குடியாத்தம் முல்லை நகரை சேர்ந்த வசந்த். பின்பு இரவு நேரங்களில் அசந்து தூங்கிக்கொண்டு இருப்பவர்களின் கழுத்தில் உள்ள தங்க தாலி, செயின் போன்றவற்றை திருடிக்கொண்டு இறங்கிவிடுவான்.
இவனை பிடிக்க சென்னை, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை போலீஸார் முயற்சி செய்து வந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 20 ந்தேதி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் திருடன் வசந்தை கைது செய்து, அவனிடமிருந்து 14 சவரன் தங்க நகையை மீட்டனர். அவனிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.