Velankanni people celebrating Christmas party

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாகை, வேளாங்கண்ணியில் களைக்கட்டும் கிறிஸ்மஸ் விழா. சிகப்பு தொப்பி அணிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஊர்வலமாகச்சென்று உற்சாகமாக நடனமாடி கொண்டாடினார்.

Advertisment

ஏசுவின் பிறந்த நாளை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடிவருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் வீடுகளிலும், ஆலயங்களிலும், பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும்.

Advertisment

மேலும் ஏசுவின் பிறப்பை நினைவுபடுத்தும் வகையில் இந்தக் குடிலில் குழந்தை ஏசு, ஆட்டு மந்தை, தேவதூதர்கள் உள்ளிட்ட சிற்பங்கள் இடம் பெறும். கிறிஸ்துமஸ் விழாவினை முன்னிட்டு தென்னிந்தியாவின் நூர் நகரம் என்று அழைக்கக்கூடிய உலகப் புகழ்மிக்க வேளாங்கண்ணி பேராலயத்தில் விண்மீன் கூடத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சிகப்பு தொப்பி அணிந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து இறுதியாக பேராலயம் முன்பு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த சிலர் இசைக்கேற்ப நடனமாடியபடியே ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்தது சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. வரும் வழியில் பக்தர்களுக்கு சாக்லேட்டுகளை கிறிஸ்துமஸ் தாத்தா வழங்கினார். கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக வேளாங்கண்ணி பேராலயத்தில் குடில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதில் இந்தியா முழுவதிலும் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.