Advertisment

கொடியேற்றத்துடன் தொடங்குகிறது வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா

pic_4.jpg

Advertisment

நாகை மாவட்டம்வேளாங்கண்ணியில் அமைந்தள்ளது புனித ஆரோக்கிய மாதா பேராலயம். தமிழ் மக்களின் மத நல்லிணக்கத்திற்கு சான்றாகவும், அனைத்து மதத்தினரும் வந்துசெல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இருக்கிறது வேளாங்கண்ணி மாதா பேராலயம்.

இந்தப் பேராலாயத்தின் ஆண்டு பெருவிழா, ஒவ்வொரு ஆண்டும் அகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதிவரை விமரிசையாக கொண்டாடப்படும். செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறும் தேர் பவனியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள்.

அந்தவகையில், இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று (29.08.2021) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.மாலை 5 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மாதாவின் உருவம் வரையப்பட்ட கொடியைப் புனிதப்படுத்தி ஏற்றிவைக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் தலைமையில் திருப்பலி பூசை நடைபெறுகிறது.

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாகபொதுமக்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாடுகளும் பூட்டப்பட்ட பேராலயத்துக்குள் நடைபெறும் என பேராலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், பேராலயம் செல்லக்கூடிய முக்கிய வழித்தடமான கிழக்கு கடற்கரை சாலை ஆர்ச் உள்பட 19 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திற்குச் செல்லவும் கடற்கரைக்குச் செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

velankanni - Church
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe