Velankanni is deserted without people moving

Advertisment

விடுமுறை தினங்களில் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணி, கரோனா ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படுகிறது. கரோனா நோய்த் தொற்றின்இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாகப் பரவிவருகிறது. இக்கட்டான சூழலில் ஆட்சி பீடத்தில் அமர்ந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், பத்தாம் தேதி முதல் 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கு என அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, கடற்கரை மற்றும் பொது இடங்களில் கூடுவதற்கு தடை ஆகியவை விதிக்கப்பட்டிருப்பதால். பொது மக்கள் கூடும் எல்லா இடங்களுமே வெறிச்சோடி கிடக்கிறது. அந்த வகையில் நாகையை அடுத்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திற்குஎப்பவும் வாரத்தின் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் பக்தர்கள்,சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகமாகவே இருக்கும்.

இரவு நேரங்களில் பரபரப்பாக காணப்படும் வேளாங்கண்ணி, இரண்டு தினங்களாக பக்தர்கள் இன்றி வெறிச்சோடியே காணப்படுகிறது. வேளாங்கண்ணி நகரம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.பேருந்து நிலையமும் கூட மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், தங்கும் விடுதிகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

Advertisment

கடற்கரையில் குளிப்பதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளதால் வேளாங்கண்ணி கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து, கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரையில் அத்துமீறி வருபவர்களைக் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேர கண்காணிப்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.