Velankanni Cathedral glows  in festival

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவைமுன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம் காண்போர் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Advertisment

கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆக.29 தொடங்கியது. இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் முகாமிட்டு ஆரோக்கிய அன்னையை தரிசனம் செய்வதற்காகக் குவிந்துள்ளனர்.

Advertisment

பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படிவேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம், நடுத்திட்டு, மாதாகுளம், பழைய வேளாங்கண்ணி, விண்மீன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது. குறிப்பாக வேளாங்கண்ணி பேராலய கோபுரங்களில் அனைத்திலும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு, அழகுற ஒளிர்வது காண்போர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் கொடியேற்றத்தைக் காண்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நடைப் பயணமாக வேளாங்கண்ணியை நோக்கி வரும் நிலையில், ஏராளமானோர் சிறிய ரதங்களை மின் விளக்கு அலங்காரத்துடன் வடிவமைத்து அவற்றில் மாதா சொரூபத்தை வைத்து இழுத்து வருகின்றனர்.