Advertisment

கூட்டம் கூட்டமாக சென்ற வாகனங்கள்; தடுத்து நிறுத்திய காவல்துறையினர்..! (படங்கள்)

Advertisment

தமிழகம் மட்டுமில்லாது இந்தியாவின் பல மாநிலங்களிலும் கரோனா பரவலின் தாக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதனால் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாக யாரும் தேவை இல்லாமல் வெளியே சுற்ற வேண்டாம் என தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது.

Advertisment

ஊரடங்கு காலத்திலும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அத்தியாவசியப் பணிகளை மட்டும் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் ஊரடங்கை மதிக்காமல் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவும் காவல்துறையினருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தவகையில், சென்னை அண்ணா சாலையில் அதிக அளவில் வாகனங்கள் சென்றதால், போலீசார் அனைத்து வாகனங்களையும் நிறுத்தினர். பின்னர் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

anna nagar Chennai traffic
இதையும் படியுங்கள்
Subscribe