தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய ரோந்து வாகனங்களுக்கு பதிலாக அதிநவீன கேமராக்கள், ஜி.பி.எஸ்., போன்ற அதி நவீன வசதிகள் கொண்ட ரோந்து வாகனங்களை அனைத்து மாநகரங்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தற்போது திருச்சி மாநகர காவல்துறைக்கு அதி நவீன ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு வழங்கிய வாகனங்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் காவல் ரோந்து பணிக்காக ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஒரு ரோந்து வாகனம் வீதம் மொத்தம் 14 வாகனங்களை சம்பந்தப்பட்ட காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு வழங்கினார்.