பைக் திருட்டைத் தட்டிக்கேட்டதற்கு வாகனங்களை ஒரு கும்பல்போதையில்அடித்து நொறுக்கியது சென்னையில்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சூளை கண்ணப்பர் திடல் பகுதியில் வசித்து வருபவர் விஜயகுமார். இவர்அப்பகுதியில் நடக்கும் வாகன திருட்டு மற்றும் பெட்ரோல் திருட்டு ஆகியவற்றை செய்துவந்த சிலரைஏரியாவுக்குள் வரக்கூடாது என்று கண்டித்துள்ளார்.இதனால்ஆத்திரத்தில்இருந்த தாவூத், நந்து, ரிச்சர்ட், மணி ஆகிய 4 பேரும்சூளைரவுண்டானா பகுதிக்கு வந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோக்களை சரமாரியாக அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவம் அறிந்த அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அனைவரும் தப்பித்து ஓட, நந்து, ரிச்சர்ட் ஆகிய இருவரையும் இது தொடர்பாககைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோல் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய தாவூத், மணி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.