/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madura (1)_23.jpg)
வாகனங்களில் வெளிப்புறம் தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்கள் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், "புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்களை 60 நாட்களில் நீக்க வேண்டும். வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்கள் படங்களை தேர்தல் தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம். தேர்தல் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. வாகனங்களில் தடைச் செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள், விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகளை நீக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)