bike

Advertisment

சென்னையில் காதல் பிரச்சினை சம்பந்தமாக இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை டி.பி.சத்திரத்தில் ஒரு வீட்டின் முன்புறத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நான் இருசக்கர வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதுதொடர்பாக மார்ட்டின் என்பவர் காவல் துறையில் புகார் அளித்திருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகவைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில் சஞ்சய், மணிகண்டன் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். போலீசார் இந்த இருவரிடம் நடத்திய விசாரணையில் மார்ட்டினின் மகன் அரவிந்தன் காதலித்த பெண்ணை மணிகண்டன் ஒருதலையாகக் காதலித்து வந்ததாகத்தெரிய வந்தது. அது தொடர்பான தகராறில் பழிவாங்குவதற்காக அரவிந்தனின் பைக்குக்குத்தீ வைத்தது தெரியவந்தது.