Vehicle theft: Shocking information released during the police investigation!

Advertisment

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகில் உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு(29). இவர், சொந்தமாக ஒரு டாட்டா ஏசி வேன் வாங்கி அதை வாடகைக்கு விட்டுள்ளார். இந்த வண்டிக்கு அரியலூர் மாவட்டம், அண்ணா காரன் குப்பத்தைச் சேர்ந்த சின்னராசு(32) என்பவரை டிரைவராக வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி உரிமையாளர் ஆனந்தபாபுக்கும், டிரைவர் சின்னராசுக்கும் இடையே வாடகை கரணமாக பிரச்சனை எழுந்துள்ளது. இதனால், ஆனந்தபாபு தன்னிடம் அவரது வண்டியை கொண்டு வந்து ஒப்படைக்கும்படி தெரிவித்துள்ளார். ஆனந்த பாபு ஊரில் இல்லாததால், அவரின் வீட்டு முன்பு வாகனத்தை நிறுத்துமாறு சின்னராசுவிடம் தெரிவித்துள்ளார்.

சின்னராசுவும், வாகனத்தை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டதாக ஆனந்தபாபுக்கு தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மறுநாள் காலை 10 மணிக்கு வீடு திரும்பிய ஆனந்தபாபு தனது வாகனத்தை வீட்டின் வெளியே தேடியுள்ளார். ஆனால், வாகனம் அங்கில்லை. அதனால், டிரைவர் சின்னராசுவிடம் போன் மூலம் வாகனம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு சின்னராசு, ‘தாங்கள் கூறியபடி டாட்டா ஏசி வாகனத்தை கொண்டு வந்து தங்கள் வீட்டுக்கு முன்பு நிறுத்தி விட்டு சென்று விட்டேன். அதற்குப் பிறகு வாகனம் எங்கே போனது, யார் எடுத்தது என்று எனக்கு எதுவும் தெரியாது’ என சின்ராசு தெரிவித்துள்ளார்.

Advertisment

இதையடுத்து ஆனந்தபாபு, தனது டாட்டா ஏசி வாகனம் திருடு போனது குறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சந்தேகத்தின் பேரில் சின்னராசுவை தேடிப் பிடித்து விசாரித்ததில் டாட்டா ஏசி வாகனத்தை தனது வீட்டிலேயே பதுக்கி வைத்துக் கொண்டு ஆனந்தபாபு வீட்டு முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டு போனதாக கூறி நாடகமாடியது தெரியவந்துள்ளது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், சின்னராசுவையும் கைது செய்தனர்.