Advertisment

வாகன விபத்து; புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

vehicle incident in karaikudi

Advertisment

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள ஆவுடை பொய்கை எனும் இடத்தில் திருமணமாகி 2 நாட்களே ஆன மதன்குமார் மற்றும் அவரது மனைவி நதியா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது திருச்சியிலிருந்து காரைக்குடி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று லாரியை முந்துவதற்கு முயன்றுள்ளது. அப்பொழுது எதிர்பாராத விதமாக மதன்குமார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் புது மாப்பிள்ளை மதன்குமாரும் அவரது மனைவியும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு இருவரும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்ட ஐந்து நிமிடத்திலேயே புதுமாப்பிள்ளை மதன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி நதியா மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். திருமணமான இரண்டு நாட்களிலேயே புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

hospital police sivakangai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe