Vehicle carrying soldier's crashes

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது. நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு.

Advertisment

Vehicle carrying soldier's crashes

வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் வைக்கப்பட்ட பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு அரசு உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் அஞ்சலிக்கு பிறகு உடல் சூலூர் விமானப்படை சாலை மார்க்கமாகக் கொண்டுசெல்லப்பட்டது. உடல்களை எடுத்துக்கொண்டு சாலையில் சென்ற ராணுவ வாகனத்திற்கு ஆங்காங்கே திரண்டு நின்ற பொதுமக்கள் வழிநெடுக அஞ்சலி செலுத்தினர். 13 பேர் உடலுக்கு பாதுகாப்புக்கு சென்ற வாகனம் குன்னூர் அருகே பறளியாறு பகுதியில் விபத்தில் சிக்கியதாகத் தகவல்கள் வெளியான நிலையில், கோவை நோக்கி உடல்களை எடுத்துச் சென்ற அமரர் ஊர்தியும் விபத்தில் சிக்கியுள்ளது. 13 அமரர் ஊர்திகளும் அணிவகுத்துச் செல்லும் நிலையில் முன்னாள் செல்லும் வாகனம் வேகத்தை குறைக்கும் நேரத்தில் பின்னால் சென்ற வாகனம் உடனே வேகத்தை குறைக்க முற்பட்டு முடியாமல் போனதால் இந்த சிறு விபத்து நிகழ்ந்தது. உடனடியாக அந்த வாகனத்திலிருந்த ராணுவ வீரரின் உடல் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டு பயணம் மீண்டும் துவங்கியது.

Advertisment