ADVERTISEMENT

டாஸ்மாக் தேடிச் சென்றால் புளியமரத்தில் மோதும் வாகனங்கள்

12:15 PM Dec 30, 2018 | bagathsingh




புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கியதும் மாவட்டம் முழுவதும் மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT


அதன் பிறகு ஆலங்குடி, கறம்பக்குடி ஆகிய இரு தாலுக்காக்கள் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகளை சத்தமில்லாமல் திறந்துள்ளனர். ஆனால் மூடிய கடைகளில் சில நாட்களிலேயே மது முடிந்துவிட்டது.


ADVERTISEMENT


ஒவ்வொரு மதுபான பாட்டிலும் ரூ. 100 வரை கூடுதலாக விற்கப்பட்டது. இதே நிலை கடைகள் திறக்கப்படாத பகுகளில் இன்றும் நீடிக்கிறது. அதனால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள கிராமங்கள் நோக்கி குடிமகன்கள் வாகனங்களில் படையெடுக்கின்றனர்.


அதே போல தான் கறம்பக்குடி பகுதி குடிமகன்கள் சம்பட்டிவிடுதி 4 ரோடுக்கு செல்கின்றனர். போகும் போது சரியாக செல்லும் குடிமகன்கள் திரும்பி வரும் போது சாலையோர புளியமரங்களில் மோதிக் கொண்டு காயமடைகின்றனர். அடிக்கடி இந்த பகுதியில் விபத்து நடக்கிறது. விபத்தில் சிக்கியவர்கள் பெரும்பாலும் மது அருந்தி வாகனம் ஓட்டியது தெரிய வந்தது. இதே போல நேற்று மாலையும் ஒரு விபத்து நடந்து வாலிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT