Vehicle accident near Tiruvasi; 6 lost

Advertisment

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே ஆம்னி வேனும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எடப்பாடியில் இருந்து திருச்சி வழியாக கும்பகோணம் நோக்கி ஆம்னி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருவாசி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக ஆம்னி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆம்னி வேனில் பயணம் செய்த குழந்தை உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.