Advertisment

சென்னையில் காய்கறி விற்பனை தொடக்கம்!

ர

கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒருவார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே, காய்கறிகள் அரசு சார்பில் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை மாநகரத்தில் மட்டும் அனைத்து மண்டலங்களிலும் 1,610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1,160 மெட்ரிக் டன் அளவிற்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில், காலை ஆறு மணி முதல் வாகனங்கள் மூலம் சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் காய்கறிகள் விற்பனை தொடங்கியுள்ளது. பகல் 12 மணிவரை இந்த விற்பனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

vegetables
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe