Published on 07/06/2021 | Edited on 07/06/2021

தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த தளர்வுகளற்ற ஊரடங்கு ஜூன் 7ஆம் தேதி காலை 06.00 மணியுடன் முடியவிருந்த நிலையில், ஜூன் 14ஆம் தேதிவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் உள்பட 38 மாவட்டங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் காலை முதலே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். கடைகள் அனைத்தும் அடுத்த ஒரு வாரத்திற்கு மாலை 5 மணிவரை திறந்திருக்கும். டீ கடைகள் உள்ளிட மக்கள் அதிகம் கூடுவதற்கு வாய்ப்புள்ள கடைகளுக்குத் தமிழ்நாடு அரசு விலக்கு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.