Skip to main content

வட்டிக் கொடுமை... தள்ளுவண்டி காய்கறி வியாபாரி தற்கொலை… உயிரைப் பறிக்கும் கரோனா கொடூரம்!

Published on 08/08/2020 | Edited on 08/08/2020

 

Aranthangi

 

அறந்தாங்கியில் கரோனா காலத்திலும் வாங்கிய பணத்திற்கு வட்டியைக் கேட்டு மிரட்டியதால் தள்ளுவண்டி காய்கறிக் கடைகாரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மிரட்டிய இருவர் மீது அறந்தாங்கி போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது போன்ற கொடூர செயல்கள் தொடரவிடாமல் தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (எ) பாலகிருஷ்ணன் (45) அறந்தாங்கியில் தள்ளுவண்டி மூலம் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்திற்காக அறந்தாங்கி மூக்குடியைச் சேர்ந்த அக்பரிடம் இருந்து சில மாதங்களுக்கும் முன்பு மணிகண்டன் ரூ.1 லட்சம் கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனுக்கு வட்டியும் ஒவ்வொரு மாதமும் செலுத்தி உள்ளார். 

 

இந்நிலையில், கரோனா தொற்று பரவலினால் அரசு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. பல இடங்களில் தளர்வுகள் கொடுக்கப்பட்டிருந்ததாலும் காய்கறி வியாபாரம் பாதிக்கப்பட்டதால் கடந்த 3 மாதங்களாக வட்டி செலுத்த முடியவில்லை.

 

இது குறித்து அக்பர் மற்றும் அவரது உறவினர் ஆறுமுகம் ஆகியோர் வட்டி கேட்டு மணிகண்டனை அடிக்கடி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பலமுறை பதில் சொல்லியும் தொடர்ந்து மிரட்டப்பட்டதால் மனஉளைச்சல் அடைந்த மணிகண்டன், பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. 

 

சம்பவம் குறித்து மணிகண்டன் மனைவி வீரம்மாள் கொடுத்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அக்பர், ஆறுமுகம் ஆகிய 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 

 

இந்நிலையில், வங்கிக் கடனுக்கான வட்டியைக்கூட தாமதமாகச் செலுத்தலாம் என அரசே அறிவித்துள்ள நிலையில் வட்டியைக் கேட்டு தற்கொலைக்கு தூண்டிய 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சடலத்தை உறவினர்கள் வாங்க மறுத்தனர். பின்னர், இருவரையும் கைது செய்வதாக போலீஸார் உறுதி அளித்ததால் உறவினர்கள் சடலத்தைப் பெற்றுக் கொண்டனர். 


கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் வங்கி, நிதி நிறுவனங்கள் கொடுத்த கடன் தொகை மற்றும் வட்டியை சில மாதங்களுக்கு வசூலிக்கக் கூடாது என்று அரசு தடை விதித்திருந்தாலும் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதைக் கண்டுகொள்ளவில்லை. இந்த கரோனா கொடூரத்தால் அடுத்தடுத்து உயிர்பலிகள் தொடங்கி உள்ளது. இதைக் கட்டுப்படுத்த போலிசார் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்களோ? 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.