/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art police siren_33.jpg)
மது போதையில்இருந்த மகன்தனது தந்தையைக்கத்தியால் குத்திய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, இனாம்குளத்தூர் காவல்கார தெருவைச் சேர்ந்தவர் மணி (எ) வேலாயுதம் (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோயில் பூசாரி. இவருக்கு சதீஷ் என்ற ஒரு மகனும், சுமதி மற்றும் லெட்சுமி என்ற இரு மகள்களும் உள்ளனர்.லெட்சுமி தனது குழந்தைகளுக்கு இன்று (24.05.2023) வீரப்பூரில் காதணி விழா ஏற்பாடு செய்திருந்தார்.
இதையறிந்த சதீஷ் நேற்று (23.05.2023) தனது தந்தையிடம் சென்று லெட்சுமி வீட்டுக் காதணி விழாவுக்குச் செல்லக்கூடாது எனப் போதையில் வாக்குவாதம் செய்துள்ளார். அதை மணி கண்டுகொள்ளவில்லை.இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் தனது தந்தை மணியை கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த இனாம்குளத்தூர் போலீசார் சதீஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow Us