Advertisment

திமுகவிற்கு ஆதரவாக வீரப்பன் மனைவி தீவிர பிரச்சாரம்!

வீரப்பனின் மனைவி முத்து லட்சுமி மற்றும் பாமகவின் முக்கிய தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் சகோதரி செந்தாமரையும் சமீபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்தார். தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் தர்மபுரி மாவட்டத்தில் மறுதேர்தல் நடைபெற உள்ள பகுதிகளான நத்தமேடு, ஜாலியூர் ஐய்யம்பட்டி உள்ளிட்ட இடங்களில் வீரப்பன் மனைவி சென்று திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார். கடைசி கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

muthu lakshmi

தமிழகம் முழுவதும் நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுடன் , 13 வாக்குச்சாவடி மையங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் தர்மபுரி மக்களவை தொகுதியில் அதிக பட்சமாக 8 வாக்குச்சாவடிகளில் மே 19 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதே போல் இந்திய முழுவதும் மக்களவை தேர்தல் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தல்கள் மே 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்து மே -23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைப்பெறுகிறது.

Advertisment

veerappan wife muthulakshmi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe