Advertisment

வீரப்பன் கூட்டாளி மாதையன் காலமானார்

Veerappan partner Matayan passed away!

Advertisment

வீரப்பனின் கூட்டாளி மாதையன் பெங்களூருவில் மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1993-ஆம் ஆண்டு கர்நாடக போலீசில் சரணடைந்த வீரப்பனின் கூட்டாளி மாதையன் மைசூர் சிறையில் 31 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மாதையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் வீரப்பனின் கூட்டாளி என்ற பெயரில் சிறையில் இருந்தவர்களில் கடைசி நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

police Prison Veerappan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe