Advertisment

வீரபாண்டி ராஜா மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Veerapandi Raja's death - Chief Minister MK Stalin's condolences!

தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ராஜா (வயது 58) இன்று (02/10/2021) சேலத்தில் காலமானார். பூலாவரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அமைச்சர்கள், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல், கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோரும் வீரபாண்டி ராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

வீரபாண்டி ராஜா மறைவுக்கு பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க.வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "வீரபாண்டி ராஜாவின் மறைவு தனிமனித மறைவு அல்ல; தூண் சாய்வது போல. வீரபாண்டியார் குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது? என்னை எப்படித்தேற்றிக் கொள்வது? சேலம் அரசு விழாவில் ராஜாவிடம் பேசிய போது, அவரது புன்சிரிப்பை மறக்க முடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

chief minister leaders passed away
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe