ADVERTISEMENT

சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வீராணம் ஏரி வறண்டது..! மாற்று ஏற்பாடு என்ன..?

04:04 PM Apr 12, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வந்த நிலையில் ஏரி வறண்டதால், வாலாஜா எரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்படுகிறது.

வீராணம் ஏரியில் இருந்து தொடர்ந்து சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஏரியில் தூர் வாருதல், கரையைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளதால், ஏரிக்கு தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர் மட்டம் சரசரவென குறைந்தது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டது.

இதற்கு மாற்று ஏற்பாடாக, வடலூர் அருகே உள்ள வாலாஜா ஏரியில் இருந்து பரவனாற்றில் தண்ணீர் விட்டு, அதை ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி வீராணம் குழாய் வழியாக சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தற்போது பரவனாற்றில் இருந்து வினாடிக்கு 15 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், வாலாஜா ஏரியில் தேக்கிவைக்கப்படுகிறது. வாலாஜா ஏரியின் முழு கொள்ளவு 5.5 அடியாகும், தற்பொழுது ஏரியில் 5.5 அடி தண்ணீர் உள்ளது. இந்த ஏரி சுமார் 1,600 ஏக்கராகும். மேலும் தண்ணீர் தேவை ஏற்பட்டால் வடலூரில் இருந்து பண்ருட்டி வரை போடப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட போர்வெல்லில் இருந்தும் தண்ணீர் எடுக்க மெட்ரோ வாட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சென்னை மக்களின் குடிநீர் ஆதாரத்தைக் காக்கும் ஏரிகளாக கடலூர் மாவட்ட ஏரிகள் உள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT