Advertisment

திருச்சியில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் திமுகவுக்கு ஆதரவு!

திருச்சி மாவட்டத்தை சுற்றியுள் 5 மாவட்டங்களில் முத்தரையர் சமூக மக்கள் பரவலாகவும் பெரும்பான்மையாகவும் இருக்கிறார்கள். இவர்களை சுற்றி தான் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளும் இருக்கும். இவர்களுக்கு அதிமுக, திமுக கட்சிகளில் முக்கியம் கொடுக்கப்பட்டு வருவது வழக்கம் சமீபத்தில் வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கத்தின் அரசியல் உரிமை மீட்பு மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அதன் நிறுவன தலைவர் செல்வகுமார்.

Advertisment

elec

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டதற்கு எங்களின் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக முதல்வர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களைச் செய்துவிட்டு எங்களின் ஒட்டுமொத்த ஓட்டுகளை அறுவடை செய்வது இனி நடக்காது. அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வரும் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் எங்கள் வீர முத்தரையர் முன்னேற்றச் சங்கத்துக்கு வாய்ப்பு வழங்கினால் அந்தக் கட்சிகளுக்கு எங்களின் ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம்." என ஆவேசமாக பேசினார். அறிவித்தார்.

இதற்கு இடையில் திருச்சி மக்களவைத் தொகுதியில் வீர முத்தரையர் முன்னேற்றசங்கம் போட்டியிடுவதுடன், பெரம்பலூர் தொகுதியில் அதிமுக-வுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சி. கருப்பையா (39). வீர முத்தரையர் சங்கத்தை கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கி அதன் நிறுவனத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு, மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

Advertisment

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட புதன்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய போது…

திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் முத்தரையர்கள் வசித்து வருகின்றனர்.

முத்தரையர்கள் பெரும்பான்மையாக உள்ள திருச்சி மக்களவைத் தொகுதியின் பிரதிநிதியாக முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர் இடம் பெற்று, நாடாளுமன்றத்தில் எங்களது சமூக குரலை ஒலிக்க வேண்டும் என்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறோம். பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளோம் என்றார் .

இந்த நிலையில் நாடாளுமன்ற பிரச்சாரத்தை திருவாரூரில் துவங்கிய திமுக ஸ்டாலின் தற்போது திருச்சியில் தங்கியிருந்து இன்று மாலை பெரம்பலூர் நாடாளுமன்ற தேர்தலில் ஐ.ஜே.கே. பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முசிறியில் இன்று பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

elec

இந்த நிலையில் வீரமுத்திரையர் முன்னேற்றசங்கத்தின் நிறுவன தலைவர் கே.என்.நேருவின் அழைப்பின் பெயரில் தி.மு.க. தலைவரை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து திருச்சியை சுற்றி உள்ள 7 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறோம் என்றார். ஆதரவு தெரிவித்த செல்வகுமாரை இன்று முசிறியில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு கொடுத்தார்.

elections thiruchy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe