Advertisment

''வீரமுத்துவேல் எங்கள் மாவட்ட மண்ணின் மைந்தர்'' - பாமக ராமதாஸ் பெருமிதம்

publive-image

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றது. தொடர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது சந்திரயான் - 3.

Advertisment

சந்திரயான் -3 தரையிறங்கும் காட்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக இன்று மாலை 5.20 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சியில் நேரலையைத் துவங்கியுள்ளது. குறிப்பிட்ட இடத்துக்கு லேண்டர் வந்தவுடன் தானியங்கி மூலம் நிலவில் தரையிறக்குவதற்கான கட்டளையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பிக்கத் தயாராகி வந்தனர். தற்போது அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்ட நிலையில் தரையிறங்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பலகட்ட நடவடிக்கைகளுக்குப் பின் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் இறங்கி நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு இந்தியா என சாதித்தது சந்திரயான் - 3.

Advertisment

publive-image

பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இந்த வெற்றிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'சென்னைக்கு அருகில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி தொடங்கிய சந்திரயான் - 3 விண்கலத்தின் பயணம் 41 நாட்களுக்குப் பிறகு நிலவின் தென் துருவத்தில் நிறைவடைந்து சாதனையாக மாறியிருக்கிறது. பதட்டம் நிறைந்த கடைசி 19 நிமிட தரையிறங்கும் நிகழ்வுக்குப் பிறகு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்த நாடுகள் பட்டியலில் இந்தியாவின் பெயர் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் நிலவில் தடம் பதித்தஉலகின் நான்காவது நாடு, நிலவின் தென் துருவத்தை சென்றடைந்தமுதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த சாதனையை படைத்த குழுவின் தலைவரான வீரமுத்துவேல் எங்கள் விழுப்புரம் மாவட்ட மண்ணின் மைந்தர் என்பது எங்களுக்கு கூடுதல் பெருமை. சாதனைக்கு காரணமான அனைவருக்கும்எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள்' எனத்தெரிவித்துள்ளார்.

ramadas pmk Space
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe