பா.ம.க.வின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், வன்னியர் சங்கம், பாமக முக்கிய பேச்சாளர்களில் ஒருவரும், காடுவெட்டி என்ற ஊரைச் சார்ந்த குருநாதன் என்ற குரு தனது 58ஆம் வயதில் நேற்று (மே.25) சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

இருமுறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த அவர், அவரது வட்டாரத்தில் தனிச் செல்வாக்குடன் திகழ்ந்தவர். சிற்சில நேரங்களில் அதீதமான மேடைப் பேச்சுகளால் பல வழக்குகளுக்கு ஆளாக்கப்பட்டவர் என்றாலும், அவரது தலைமைக்கும், கட்சிக்கும் கடுமையாக உழைத்தவர்.

Advertisment

அவரது மறைவால் வாடும் ராமதாஸ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், அவரது இயக்க நண்பர்களுக்கும் ஆறுதல் கூறி, திராவிடர் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவ்வாறு கூறியுள்ளார்.