லயோலா கல்லூரி மற்றும் ஊடக மையம் இணைந்து நடத்தும் வீதி விருது விழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் நேற்று முந்தினம் துவங்கி (11.01.2020) இரண்டுநாட்களாக நடைபெற்ற விழாவில் தமிழகம் முழுவதுமிருந்து பல்வேறு துறைகளைச் சார்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர். சிறப்பாக நேற்றைய விழா கலை பேரணியுடன் துவங்கியது. நாட்டுப்புற கலைஞர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து சென்ற வருடம் வெளியான ஒத்த செருப்பு, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, அசுரன் ஆகிய திரைப்படங்கள் மீதான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர்கள் சேரன், பார்த்திபன், அதியன் ஆதிரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஒரே மேடையில் இத்தனை ஆச்சரியங்களா..! வியக்க வைத்த வீதி விருது விழா..! (படங்கள்)
Advertisment