Advertisment

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த வேத சாலை மாணவன்; உடலை தேடும்பணி தீவிரம் 

Vedic road student drowned in river; The search for the body is intense

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை தொடங்கியுள்ள சமயத்தில் நீர் நிலைகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குளிக்கும் பொழுது மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வேத சாலையில் பயின்று வந்த மாணவர்கள் ஆற்றில் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்ற 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலும், அவருடன் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஆந்திராவை சேர்ந்த அபிராம் (வயது 13), மன்னார்குடியை சேர்ந்த ஹரி பிரசாத் (வயது 14) ஆகியோரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள ஆண்டவன் வேத பாடசாலையில் தங்கி பயிலும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

incident rivers thiruchy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe