வேதாரண்யம் அருகே அவுரிக்காடு-வண்டல் கிராமமக்கள், மழை நீர் பெருக்கெடுத்துள்ள அடப்பாற்றின் குறுக்கே பயணிக்க ஏதுவாக கட்டணம் இல்லாத படகுப் போக்குவரத்து திட்டத்தை அறிமுக செய்துள்ளதுமாவட்ட நிர்வாகம்.
நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு பேரூராட்சி பகுதிக்குட்பட்ட வண்டல், குண்டூரான்வெளி கிராமங்கள் வடகிழக்குப் பருவமழை காலத்தில் வெள்ளநீரால் சூழப்பட்டு மக்களின் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்படுவது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்துவரும் நிகழ்வுகளில் ஒன்று.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
வண்டல், குண்டூரான்வெளி கிராமத்தினர் பள்ளிக்கூடம் கல்லூரி மற்றும் வேலைவாய்ப்பு, வெளியூர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக வெளியில் செல்ல அப்பகுதியின் நடுவே ஓடும் அடப்பாற்றைக் கடந்தே அவுரிக்காடு என்னும் கிராமத்தின் வழியே வெளியிடங்களுக்கு செல்லவேண்டியுள்ளது.
இந்நிலையில், அடப்பாற்றின் குறுக்கே 8 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு கிடப்பில் இருக்கும்பாலம் கட்டும் பணி முடிவடையாத நிலையில், இடையில் பேய்த கனமழையின் காரணமாக தண்ணீரின் அளவு அதிகரித்ததால் மக்கள் நடந்து செல்வவே முடியாத நிலையானது. இந்த சூழலில் தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் கண்ணாடியிழைப் படகு ஒன்று இயக்கப்பட்டனர் அதற்கு மக்கள் கட்டணம் செலுத்தியே பயணித்து வந்தனர்.
இதையடுத்து, கட்டணம் இல்லாத படகுப் போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்திவந்தனர். அதன் பிறகே மீன்வளத்துறையின் சார்பில் கட்டணம் இல்லாத கண்ணாடியிழைப் படகு சேவையை அடப்பாற்றின் குறுக்கே தொடங்கியுள்ளனர்.
எட்டு ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட பாலபணிகளை முடிக்க முடியாத அதிமுக அரசு, அமைச்சர் ஒ.எஸ்.மணியன் இலவச படகு மூலம் பரிகாரம் தேடுக்கிறார். அமைச்சரின் சொந்த ஊருக்கே இப்படி என்றால்மற்ற ஊர்களின் நிலமையை கேட்கவே வேண்டும், என கிண்டலடிக்கிறார்கள்.