'' Vedanta should not be allowed ''

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க வேதாந்தா நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் கச்சா எண்ணெய் தொழிலில் முன்னணியில் உள்ள 'கெய்ர்ன் ஆயில்' என்ற வேதாந்தா குழுமத்தின் அங்கமாக இருக்கக்கூடிய நிறுவனம் தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம், புதுச்சேரியில் காரைக்கால் ஒட்டிய கடலோர பகுதிகளில் எண்ணெய், எரிவாயு திட்டங்களுக்கு அனுமதிகேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், தமிழகத்தில் விழுப்புரம், நாகப்பட்டினம் கடலோர பகுதிகளில் 102 எண்ணெய் கிணறுகளையும், புதுச்சேரியில் காரைக்காலை ஒட்டிய கடலோர பகுதிகளில் 137 கிணறுகளையும் உருவாக்கி ஆய்வுசெய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் கடலோர பகுதிகளில் எண்ணெய், எரிவாயு திட்டங்களை மேற்கொள்ள மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதையும் வேதாந்தா குழுமத்தின் கெய்ர்ன் ஆயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் எண்ணெய்,எ ரிவாயு கிணறுகள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. இதற்கு அனுமதி அளித்தால் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும். கடல் வளம், மீன் வளம் பாதிக்கப்படும் என்று கோரிக்கை கடிதம் மூலம் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.