பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தலித் சமூக இளம்பெண்ணை, சட்டவிரோதமாக இரவோடு இரவாக எரித்த உத்தரப்பிரதேச காவல்துறையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகில் உள்ள லெட்சுமாங்குடியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அவர்களது கூட்டணிக் கட்சியினர் இணைந்து, உத்தரப்பிரதேச சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் "சட்டத்தை மீறி பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை எரித்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மாநில முதல்வர் யோகி பதவி விலக வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் உடனே திரும்பப் பெற வேண்டும்.” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.