Skip to main content

''18 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஆர்எஸ்எஸ்க்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது'' - திருமா பேட்டி 

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

vck thirumavalavan pressmeet

 

18 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஆர்எஸ்எஸ்க்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், “பாஜக என்பது வெளிப்படையாக இயங்கக்கூடிய ஒரு அரசியல் இயக்கம். தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற ஒரு அரசியல் கட்சி. மக்களுக்குப் பதில் சொல்லக்கூடிய இடத்தில் பாஜக இருக்கிறது. வாக்கு வங்கியை நம்பி அது செயல்படுகிறது. ஆகவே பாஜகவிற்கு சில பொறுப்புகள் இருக்கிறது. சட்டப்பூர்வமாகப் பதில் சொல்லக்கூடிய இடத்தில் பாஜக இருக்கிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் பதிவு செய்யப்பட்ட இயக்கமாகவும் இல்லை. உறுப்பினர்களை அதிகாரப்பூர்வமாகக் கொண்டிருக்கக்கூடிய இயக்கமாகவும் இல்லை. பொறுப்பாளர்களை நியமிக்கக் கூடிய இயக்கமாகவும் இல்லை.

 

மாநில பொறுப்பாளர்கள் யார், மாவட்டப் பொறுப்பாளர்கள் யார், ஒன்றிய பொறுப்பாளர்கள் யார், என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு அவர்களால் பட்டியலைத் தர முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு தலைமறைவு பயங்கரவாத இயக்கத்தைப் போலச் செயல்படுகின்ற ஒரு இயக்கம், திரைமறைவில், இருட்டில் செயல்படுகின்ற ஒரு இயக்கமாகத்தான் ஆர்எஸ்எஸ் இருக்கிறது. எனவேதான் ஆர்எஸ்எஸ் இயக்கம் வெளிப்படையாக இப்படி கலாச்சாரத்தின் பெயரில் பேரணி நடத்துகிறோம், இயக்கம் நடத்துகிறோம் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டுவதற்கு, வெறுப்பு அரசியலை விதைப்பதற்கு மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், சமூகத்தைப் பிளவு செய்வதற்கு முயற்சி செய்கிறது. கடந்த காலங்களில் வட இந்திய மாநிலங்களில் இப்படிச் செய்திருக்கிறது. 18 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஆர்எஸ்எஸ்க்கு தொடர்பு இருக்கிறது என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு இருந்த தொடர்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் சான்றாக வைத்துத்தான் ஆர்எஸ்எஸ் பொது இயக்கமாக நடமாடக்கூடாது என்பது எங்கள் வலியுறுத்தலாக இருக்கிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அம்பேத்கர் பிறந்தநாளில் தேர்தல் அறிக்கை வெளியிடுவது பாஜகவின் ஏமாற்று வேலை'-கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'Issuing election manifesto on Ambedkar's birthday is a scam by BJP' K. Balakrishnan review



கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் அம்பேத்கர் புகழ் ஓங்குக என கோஷங்களை எழுப்பினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில்,'' காலங்காலமாக இந்தியாவில் நிலவிய சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து அனைவரும் சமம் என்கிற ஒரு நிலையை உருவாக்க தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட மகத்தான தலைவர் அம்பேத்கர். மனிதர்களுக்குள்ளே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக் கூடாது என்கிற உயர்ந்த லட்சியத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்த எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அதனை நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

அரசியல் சாசனத்தையே அப்புறப்படுத்தி விட்டு வர்ணாசிரம தர்மத்தை அரியணை ஏற்றுவதற்கு துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான கூட்டணி இன்று பகிரங்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதை வீழ்த்துகிற மகத்தான கூட்டணியாக இந்தியா கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வட இந்தியாவில் உள்ள தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மத்தியிலே ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என உறுதியாகி உள்ளது.

தமிழ்நாட்டில்  பாட்டாளி மக்கள் கட்சி கையை முறுக்கி கடைசி நேரத்தில் கையெழுத்து வாங்கி உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து நான் கேட்பதெல்லாம் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே இந்த நாட்டில் இருக்கக் கூடாது. சாதி ஏற்றத்தாழ்வுகள் பிரம்மாவால் படைக்கப்பட்டது. வருணாசிர தத்துவம் தான் இந்த ஆட்சியினுடைய தத்துவம் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.கவோடு இட ஒதுக்கீட்டிற்காக போராடும் நீங்கள் சமூக நீதியை வற்புறுத்துவதற்காக போராடும் நீங்கள் தேர்தல் உறவு கொண்டது இயற்கை நியதிகளுக்கே விரோதமானது இல்லையா?

அம்பேத்கருடைய கொள்கைகளுக்கு சாவுமணி அடிக்கிறவர்கள், சாதிய ஏற்றத்தாழ்வுகளை தூக்கி பிடிக்கிறவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் எங்கள் லட்சியம் என்பவர்கள், வர்ணாசிரம தர்மம் தான் இந்தியாவின் அரசியல் சாசனமாக மாற்ற வேண்டும் என அறிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கக் கூடிய பா.ஜ.க அம்பேத்கர் பிறந்த தினத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான கபட நாடகம். சிதம்பரத்தில் திருமாவளவன் மகத்தான வெற்றி பெறுவார்'' எனக் கூறினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத்லைவர் மூசா, மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயச்சித்ரா, நகர்மன்ற துணைத்தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய செயலாளர்கள் மனோகர்,செல்லையா, விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் பால.அறவாழி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Next Story

'எரியுதுடி மாலா ஃபேன போடு என கதறுகிறது பாஜக'-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு  

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
BJP shouts 'Eriyuthudi malaa fana potu' - Chief Minister M.K.Stal's speech

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்பில் ஈடுபட்டு வருகிறது. சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். மேடையில் பேசிய அவர், 'திருமாவளவனை வெற்றி பெறவைக்க வேங்கையின் மைந்தன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தையும், அரியலூர் அரிமா எஸ்.எஸ்.சிவசங்கரையும் இறக்கி விட்டிருக்கிறேன். ஒரு சிறுத்தைக்காக இரண்டு சிங்கங்கள் களத்தில் இருக்கின்றன. அதேபோல் மயிலாடுதுறையின் நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுதா வெற்றி பெற கை சின்னத்தில் வாக்குகளை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தயாராகி விட்டீர்களா? இரண்டு பேரையும் வெற்றி பெற வைக்க தயாராகி விட்டீர்களா? இந்த மு.க.ஸ்டாலின் தூதுவர்களாக உங்கள் பகுதியில் உள்ள மக்களிடமும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளை திரட்ட வேண்டும். தமிழ்நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவர் பிரதமராக நீங்கள் வாக்களிக்க வேண்டும். சமூகநீதியை காண்கின்ற ஒரு பிரதமர் டெல்லியில் அமர வாக்களிக்க வேண்டும். சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை, அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் ஒரு பிரதமர் நாட்டை ஆள்வதற்கு வாக்களிக்க வேண்டும்.

இப்பொழுது இருக்கிற பிரதமர் மோடிக்கு சமூகநீதி மேல் அக்கறை இல்லை. மதச்சார்பின்மையை  மருந்துக்கு கூட நினைப்பதில்லை. சமத்துவத்திற்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவை அவருக்கு பிடிக்கவில்லை. மொத்தத்தில் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை பகையாளி இந்தியாவாக மாற்ற நினைக்கும் ஒரு பிரதமர் நமக்கு தேவையில்லை.

இந்த தேர்தல் மூலமாக இரண்டாம் விடுதலை போராட்ட வரலாற்றை எழுத நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. தமிழ்நாட்டில் வேரூன்றியுள்ள சமூகநீதி இந்தியா முழுக்க பரவ கிடைத்த வாய்ப்பு தான் இந்தியா கூட்டணி. சமூக நீதி நமக்கு சும்மா கிடைத்ததில்லை. தியாகத்தால் விளைந்தது தான் சமூக நீதி. சமூக நீதிதான் ஒன்றும் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது. நாட்டுக்கே வழிகாட்டக் கூடிய வகையில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு இருக்கிறது என்றால் அதற்கு காரணம் திராவிட இயக்கமும் நம்முடைய கலைஞரும்தான். இரண்டு மூன்று தலைமுறையாகதான் நம்ம வீட்டில் இருந்து இன்ஜினியர்கள், டாக்டர்கள் வாரார்கள். முன்பு அத்திப்பூத்த மாதிரி சில ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வர முடிந்தது. ஆனால் இப்பொழுது அதிகம் வர முடிகிறது. இதெல்லாம் பாஜகவினுடைய கண்ணை உறுத்துகிறது. இந்த வேலைக்கு இவர்களெல்லாம் இட ஒதுக்கீடால் வந்து விடுகிறார்களே என நினைக்கிறார்கள். 'எரியுதுடி மாலா ஃபேன போடு' என்று கதறுவார்கள். இட ஒதுக்கீட்டை நம்மிடம் இருந்து தட்டிப்பறித்து நம்ம குழந்தைகள் படித்து வேலைக்கு போவதை எடுக்க என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட பாஜகவுடன் தான் பாமக கூட்டணி பேசியிருக்கிறது'' என்றார்.