Skip to main content

 பிரச்சார வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 4 பேர் பலி: அதிமுக வேட்பாளர் மீது வழக்கு தொடர விசிக முடிவு

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

 

மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் ஆசைமணிக்கு வாக்கு கேட்டு சென்ற குட்டிவாகனம் (டாட்டா ஏஸ்) ஆற்றில் தடம்புரண்டு 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை தேர்தல் களத்தில் பெரும் பதட்டத்துடன் கடந்த பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

a

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்துள்ள குத்தாலம் கந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர், தனபால், அருள்தாஸ், விநாயகராஜா, மதியழகன், உள்ளிட்ட 30 க்கும் அதிகமானோர் டாட்டா ஏஸ் என்கிற குட்டியானை வாகனத்தில் அவர்கள் கிராமத்திலிருந்து, மங்கைநல்லூர் பகுதியில் நடந்த ஆசைமணிக்கு வாக்கு சேகரிப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றனர்.

 

அங்கு வாக்காளர்களுக்கு பணப் பரிவர்த்தனை, உள்ளிட்ட மது விருந்து கொடுக்கப் பட்டிருக்கிறது.  பணத்தோடு குஷியாக மங்களூரில் இருந்து கோமல் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்,  அதிக லோடு தாங்காமல் டயர் வெடித்து டாட்டா ஏஸ் ஆற்றில் புரண்டதால் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இருந்துள்ளனர். மீதமுள்ளவர்களில் 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஏழு பேரை மயிலாடுதுறையிலும்,  நான்கு பேரை திருவாரூரிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை  அளிக்கப்படுகிறது.  வைத்துள்ளனர் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

v

 

இதனை கண்டித்து நியாயமான நீதி வேண்டும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் சி. மோகன் குமார் தலைமையில் பேரணியாக சென்று மயிலாடுதுறை தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியரிடம்  அதிமுக வேட்பாளர் ஆசைமணி சட்டவிரோதமாக கூட்டத்தை திரட்டியிருக்கிறார், லோடு வாகனத்தில் பயணிகளை ஏற்றக் கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும் அதை மீறி வேட்பாளர் கூட்டத்தைத் திரட்டியிருக்கிறார். அதோடு அங்கு பணம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.இந்த நான்கு பேர் இழப்பிற்கு வேட்பாளரே காரணம். திட்டமிட்டு கூட்டத்தை கூட்டி அவர்களின் இறப்பிற்கு காரணமாகியிருக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வேட்பாளரை தகுதிநீக்கம் செய்யவேண்டும்," என மனு கொடுத்துள்ளார்.

 

 அதை வாங்கிக்கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார் உள்ளிட்டவர்களோ" நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்" என ஆக்ரோஷமாக கூறிவிட்டு வந்துள்ளனர்.

 

 அதன் பிறகே அதிமுக பூம்புகார் எம்எல்ஏ பவுன்ராஜ், மயிலாடுதுறை எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், சீர்காழி எம்எல்ஏ பாரதி, உள்ளிட்டவர்கள் தலையிட்டு உங்களின் குடும்பத்திற்கு நாங்கள் தான் உங்களுக்கு உதவி செய்ய முடியும், விடுதலை சிறுத்தைகளோ, திமுகவோ ஒன்றும் செய்துவிட மாட்டார்கள் உங்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் என கூறி உடலை பெற்றுச் சென்றுள்ளனர். 

 

இதுகுறித்து விசிக மோகன்குமார்," டாட்டா ஏஸ் வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது என்பது உயர்நீதிமன்ற உத்தரவு, அதோடு டாட்டா ஏஸ் விபத்து ஏற்பட்டால் பயணிகளை ஏற்றிச் செல்லும்போது அவர்களுக்கு இழப்பீடு தொகை வாங்க முடியாது என்பது தெரிந்தும் பூம்புகார் எம்எல்ஏ உங்களுக்கு இன்சூரன்ஸ் கிளைன் பண்ணி தரப்படும் என பொய்யான உத்தரவாதத்தை கொடுத்து அவர்களை ஏமாற்றி இருக்கிறார். அவர்களின் முகத்திரையை தேர்தலில் கிழிப்போம், " என்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.