Advertisment

வருத்தத்தில் விடுதலை சிறுத்தைகள்!

vck

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தோழமைக் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது திமுக. விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் இடதுசாரிகள் கட்சிகளுடன் இன்னும் பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். அந்த சந்திப்பில், சிறுத்தைகளுக்கு ஒரு சீட் தருவதாகச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஏற்கனவே இதைத்தான் திமுகவின் பேச்சுவார்த்தை குழுவினர் தெரிவித்திருப்பதாக சொன்ன திருமாவளவன், " ஒரு சீட் என்பதை சிறுத்தைகள் ஏற்க மாட்டார்கள். 2 சீட் ஒதுக்குங்கள் " என வலியுறுத்தினார். 2 சீட் கொடுப்பதன் மூலம் திமுக-சிறுத்தைகளின் கூட்டணியும் உறவும் எந்தளவுக்கு வலிமையாகும் என்பதையும் தெரிவித்திருக்கிறார் திருமாவளவன். ஆனாலும், ஒரு சீட் என்பதிலேயே உறுதியாக இருந்தார் ஸ்டாலின். இதனால், வருத்தத்துடன் எழுந்த திருமா, "கட்சியினருடன் விவாதித்து விட்டுச் சொல்கிறேன் " என தெரிவித்துவிட்டு ஸ்டாலினின் வீட்டிலிருந்து கிளம்பிவிட்டார்.

Advertisment

ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விவாதித்தார் திருமா. அதைக்கேட்டு சிறுத்தைகள் ஏகத்துக்கும் வருத்தப்பட்டனர். இது குறித்து அவர்களிடம் நாம் பேசியபோது, " 2009 மற்றும் 2014 ஆகிய நாடாளுமன்ற தேர்தலில் சிறுத்தைகளுக்கு 2 சீட்டுகள் ஒதுக்கியது திமுக. இப்போது மட்டும் 1 சீட் என்பது எந்தவிதத்தில் நியாயம் ? சிறுத்தைகளுக்கு 2 சீட்டுகள் ஒதுக்குவதன் மூலம், திமுகவுக்கு 20 தொகுதிகளில் லாபம். ஆனால் திமுக தலைமை இதை உணர மறுக்கிறது " என ஆதங்கப்படுகிறார்கள். ஆக, கூட்டணி விசயத்தில் ஏக வருத்தத்தில் இருக்கின்றனர் விடுதலை சிறுத்தைகளின் தலைவர்கள்.

coalition vck thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe