Skip to main content

குடிநீர்த் தொட்டியில் மனித கழிவை கலந்தவர்களை கைது செய்யக்கோரி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

 

vck struggle demanding arrest those involved vengaivayal issue

 

ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலந்தவர்களை கைது செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் விடுதலை சேகரன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ராமநாதபுரம் நகரச் செயலாளர் சையது அபுதாஹிர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் நைனா அசாருதீன், பிரபாகரன், செய்தி தொடர்பாளர்கள் சத்யராஜ் வளவன், முகவை மீரான், தொகுதி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணைச் செயலாளர் மாலின் கண்டன உரையாற்றினார்.

 

மேலும் இதில் மண்டலச் செயலாளர் முகமது யாசின், பாராளுமன்ற தொகுதி செயலாளர் கோவிந்தராஜ், மாநில துணைச் செயலாளர் கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்கம் விடுதலை கிட்டு, சமூக நல்லிணக்க பேரவை மாநில துணைச் செயலாளர் முகமது இஸ்மாயில், மாநில துணைச் செயலாளர் இஸ்லாமிய ஜனநாயக பேரவை முத்து வாப்பா, வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் கோபால் பாண்டி மற்றும் மாநில துணைச் செயலாளர் பாலு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !