vck Second consultation with DMK today!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, 15 இடங்கள் கேட்டு விருப்ப பட்டியலைக் கொடுத்துள்ளதாகவும், அதில்9தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவிசிக கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில், திமுக 5 தொகுதிகளைத் தர முன் வந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தொகுதிப் பங்கீடு இழுபறி தொடர்பாக விசிக உடன் இன்று (04.03.2021) திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. இரட்டை இலக்க தொகுதிகளை விசிக கேட்டுவருவதால்தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.