Skip to main content

இரத்த வெள்ளத்தில் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர்!!!

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், ஆத்தியடிப்பட்டி, வாண்டான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன்.
 

vck


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர். துடிப்பான இளைஞராக மக்கள் நலப்பணிகளில் நடக்கும் முறைகேடுகளை சுட்டிககாட்டுவதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டங்கள் நடத்துவதுமாக இருந்தார்.
 

இவரது இந்த செயலால் பலரும் இவர் மீது கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கறம்பக்குடியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால் வீடு போய் சேரவில்லை. அதனால் வீட்டில் உள்ளவர்கள் சௌந்தரபாண்டியனை காணவில்லை என தேடிக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் சாலையில் ஒருவர், ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த மக்கள் அது சௌந்தரபாண்டியன் என்பதை அடையாளம் கண்டு தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 


கறம்பக்குடி போலிசார் விபத்து என வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இது விபத்து இல்லை சௌந்தரபாண்டியன் மீது கோபமாக இருந்த யாரோ அவரை கொல்ல நினைத்து பின்னால் தாக்கியுள்ளனர். ரத்தவெள்ளத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்ததால் இறந்துவிட்டதாக சென்றுவிட்டனர். அதனால் சௌந்தரபாண்டியனை தாக்கிய மர்ம நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளனர். நடவடிக்கை இல்லாத நிலையில் போராட்டங்களை நடத்தவும் தயாராகி வருகின்றனர். சௌந்தரபாண்டியன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஆபத்தான நிலையில் உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்