தமிழகம் முழுக்க சாதி ஆணவப்படுகொலைகள் நாளுக்குநாள்அதிகரித்க வருவதை கண்டித்தும், ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும்,மேலும் ஆணவப்படுகொலையில் ஈடுபடும் கூலிப்படையினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பலகோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

Advertisment

vck protest in erode

அதன்பேரில் இன்று ஈரோட்டில் ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆணவப்படுகொலையை கண்டித்தும், அவற்றுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும், கூலிப்படையினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதேபோல் தமிழகம் முழுக்க அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் வி.சி.கவினர் போராட்டங்கள் நடத்தினார்கள்.