Advertisment

‘தீண்டாமை பாகுபாடுகளை அறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ - விசிக ஆர்ப்பாட்டம்

vck members struggle at Kulithalai

தீண்டாமை பாகுபாடுகளை அறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்து விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய விசிக சார்பில் நேற்று, குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு, குளித்தலைஅரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்,குளித்தலை ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் தீண்டாமை பாகுபாடுகளை அறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மெத்தனமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,குளித்தலை பேருந்து நிலைய விரிவாக்க பணி முடிந்தும்மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

விசிக ஒன்றிய செயலாளர் மாயவன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

karur Kulithalai vck
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe