தஞ்சையில் விசிக கொடி நிறுவுவதில் மோதல்... 20 பேர் காயம்

vck incident in thanjai

தஞ்சை மாவட்டம்கபிஸ்தலம்ஆற்றில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ள நிலையில்,இந்த சம்பவம் தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னி ஆற்றுப்பாலத்தில் விசிக கொடியை நிறுவ அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்குஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அது மோதலாக மாறியது. இந்த மோதலில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிதாக்கிக்கொண்டதில்20 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்குபதற்றம்தொற்றிக்கொண்ட நிலையில், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.மோதலில் ஈடுபட்டது தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

incident Thanjai vck
இதையும் படியுங்கள்
Subscribe