/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_259.jpg)
2019ஆம் ஆண்டு கோயம்புத்தூரையே உலுக்கிய சம்பவமாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் இருந்தது. இந்தச் சம்பவத்தில் அடுத்தடுத்த குற்றவாளிகள் பிடிப்பட்டுவந்த நிலையில், அ.தி.மு.க. மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹெரென் பால், பாபு ஆகிய மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதற்கானஅனைத்து பெருமையும் நக்கீரனையே சாறும் என்று வி.சி.க. கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘பொள்ளாச்சியில் பெண்களைக் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் துவக்கத்தில் இருந்தே அ.தி.மு.க.வினர் சம்மந்தப்பட்டுள்ளனர். என்று துணிச்சலாகவும் அறச்சீற்றத்துடன் சொன்னது நக்கீரன்தான். இவ்வழக்கை சி.பி.ஐ. இவ்வளவு காலாமாக விசாரணை செய்து உண்மையைக் கொண்டுவரும் முன்பே நக்கீரன் அம்பலப்படுத்தியது” என்றும் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)