
கடலூரில் கோவில் கும்பாபிஷேக விழாவில் திமுக -விசிக பிரமுகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் இருதரப்பு மோதலாக மாறி கலவரம் வெடித்ததில் பலர் காயமடைந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர விசிக செயலாளரும்கவுன்சிலருமான கார்த்திகேயன் தரப்பினருக்கும் திமுக நிர்வாகியான அருண்குமார் தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் நடைபெற்ற அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்த இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்பொழுது திடீரென கற்கள், தடி, கத்தி உள்ளிட்ட பொருட்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பலர் காயமடைந்தனர் .இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கார்த்திகேயன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர். கோவில் திருவிழாவில் கட்சி பிரமுகர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us