var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
நேற்று நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்டமுன் விரோதம் காரணமாக அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தற்போது போலீசார் குவிக்கப்பட்டு புதிய சிலை நிறுவப்பட்டுள்ள நிலையில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் கோவை மற்றும் வேதாரண்யத்தில் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவமும் நடைபெற்றது.
இந்த சம்பவம் தொடர்பாக மோதலில் ஈடுபட்ட இரு தரப்பிலும் 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் புரட்சியாளர்அம்பேத்க்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சென்னைஅண்ணா சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட விசிக கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.