Advertisment

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதில் தள்ளுமுள்ளு... பாஜக, விசிகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் மதுரையில் பரபரப்பு!!  

vck bjp incident in madurai

இன்று (14.04.2021) சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 130வதுபிறந்தநாள் நாடுமுழுவதும்கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினருக்கும் விசிகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பானது.

Advertisment

மதுரை தல்லாகுளத்தில் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக,மதிமுக, விசிக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்என பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில்,மாலை அணிவித்து மரியாதை செலுத்த அதிமுகவினரும் பாஜகவினரும் காத்திருந்தனர். இந்நிலையில் அங்கு கூடியிருந்த விசிகவினர், பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாதுஎன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் மஹாசுசீந்திரன்தலைமையில் கூடியிருந்த பாஜகவினரை, கைகளில் உள்ள கொடிகளைக் கொண்டு தாக்கினர். பின்னர் அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உரிய நேரம் ஒதுக்கப்படும், அப்போது வந்து மரியாதை செலுத்திக்கொள்ளுங்கள் என சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். இந்த மோதல்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

ambedkar vck
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe